முடியின் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் ப்ரிந்துரைக்கும் 5 உணவுகள் இதோ... ட்ரை பண்ணுங்க
healthtips
hairgrowth
ayurvedicfoodsforhairgrowth
By Petchi Avudaiappan
நவீன காலக்கட்டத்தில் முடி உதிர்தல்,பொடுகு, முடி வறட்சி, வழுக்கை போன்ற கூந்தல் பிரச்சனைகள் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகள் வந்து விட்டாலும் உணவுப் பொருட்கள் மூலமாகவும் நாம் இப்பிரச்சனைகளை தவிர்க்கலாம் என நிபுணர்கள் தெரிவ்க்கின்றனர்.
அந்த வகையில் முடியின் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் ப்ரிந்துரைக்கும் 5 உணவுகள் குறித்து நாம் இதில் காண்போம்.
- ஈரமான பகுதிகளில் வளரும் மருத்துவ மூலிகையான கரிசலாங்கண்ணி கீரை முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இது புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை எளிதாக்குவதோடு முடியின் அளவு அதிகரிக்க செய்கிறது. இந்த கீரையை உலர்த்தி தூளாக்கி அதை எண்ணெயுடன் கலந்து சூடாக்கி எண்ணெயை தயாரிக்கலாம். இதை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் பிறகு கழுவி விட வேண்டும்.
- சமையலில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களில் ஒன்றான வெந்தயத்தை ஆயுர்வேதம் அழகு பராமரிப்பிலும் அங்கீகரித்துள்ளது. வெந்தய விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில் இது முடி உதிர்தல் மற்றும் பொடுகு , முடி வறட்சி, வழுக்கை போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது
- நெல்லிக்காய் பண்டைய காலம் முதலே கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெயை கொண்டு கூந்தலை மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலை இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.
- சேதமடைந்த முடியை சரி செய்து முடியின் அளவை அதிகரிக்க உதவும் திரிபலாவில் கடுக்காய் மூலப்பொருளான பாக்டீரியா எதிர்ப்பு மற்றூம் பூஞ்சை எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால் பொடுகு பிரச்சனை சரியாகிறது.
- தலைமுடியை வசீகரப்படுத்துவதோடு முடி தொடர்பாக ஏற்படும் மன அழுத்ததையும் குறைப்பதில் வல்லாரை கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்ய, முடி உதிர்வதை தடுக்க, பொடுகு, அரிப்பு மற்றும் பிளவு முனைகளை உருவாக்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.