நீ அழாதே... நான் இருக்கேன்... - துக்கத்தில் இருந்த பெண்ணை கட்டியணைத்த குதிரை...!
துக்கத்தில் இருந்த பெண்ணை கட்டியணைத்த குதிரை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பெண் தனிமையில் அமர்ந்து தன் துக்கம் தாளாமல் சோகத்தில் மூழ்கியிருந்தாள். இதைப் பார்த்த 4 வயது குதிரை தன் உரிமையாளரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அப்பெண்ணை தன் நெஞ்சோடு சாய்ந்தது. அப்போது, அப்பெண் துக்கம் தாளாமல் அழுதாள். அப்போது, அந்த குதிரை அவளை கட்டியணைத்து நான் இருக்கிறேன் என்று உறுதியளித்தது.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அடடா.. மனிதர்களை விட செல்லப் பிராணிகள் எவ்வளவு மேல்... என்று நெகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
This 4yo horse understands her owner’s emotions and reassures her pic.twitter.com/LtTPXEGS8l
— made me smile (@mademe__smile) December 29, 2022