பட்டாசு வெடித்ததில் விபரீதம்..!! ராணிப்பேட்டையில் 4 வயது சிறுமி உயிரிழப்பு !!
தீபாவளி தினத்தை முன்னிட்டு சென்னை மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட சோகத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி
நேற்றைய தினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து திருநாளை கொண்டாடினர். அவ்வாறு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதத்தால் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாம்பாக்கம் பகுதியில் இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது 4வயது மகள் நவீஸ்காமற்றும் ரமேஷின் அண்ணன் விக்னேஷுடன் ஆகியோருடன் இணைத்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தீப்பொறி
நவிஷ்காவை தூக்கியபடி விக்னேஷ் பட்டாசு வெடித்துள்ளார். வெடிவெடிக்கும் பொழுது உருவான தீப்பொறி அவர்கள் வைத்திருந்த பட்டாசில் பட்டு வெடித்து சிதற தொடங்கியுள்ளது. அதில், நவிஷ்கா மார்பு மற்றும் கைப்பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுளள்து. இந்த அசம்பாவிதத்தில் விக்னேஷின் இடது கையில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டது.
தீக்காயமடைந்த சிறுமி நவிஸ்காவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.