இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில்,
4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அஷ்வினுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைக்கவில்லை.
ரோகித் சர்மா 11 ரன்கள், கே.எல்.ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் கேப்டன் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர். இந்திய அணி, உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.