அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து - அசத்திய பும்ரா
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியில் அதிகப்பட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும்,கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் விக்கெட் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் நூறு விக்கெட் எடுத்த சாதனையை அவர் இன்று படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.