தங்கம் வாங்க திட்டமா ? ஜூலை 4-ஆம் தேதியின் சந்தை நிலவரம் இதோ!
இன்றைய சந்தை சிலவரத்தின் அடிப்படையில் (ஜூலை 4) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த ஜூன் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, ஜூலை மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை எதிர்பாராத விதமாகக் குறைந்தது.

ஆனால் அதன்பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கடந்த மூன்று நாட்களாக காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,550க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,400 என்ற விலையை எட்டியது.
அதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ.150 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,700க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், 18 காரட் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் ரூ.11,440க்கும், ஒரு சவரன் ரூ.91,520க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,700க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் மாற்றமின்றி நீடிக்கிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.