இனி உடலுறவுக்கு நோ - டிரம்ப் வெற்றியால் '4பி'யில் இணையும் அமெரிக்க பெண்கள்
டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்க பெண்கள் 4பி இயக்கத்தில் இணைய தொடங்கியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 05.11.2024 அன்று நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெண்களின் கருக்கலைப்புக்கான உரிமையை தடை செய்யும் தீர்ப்பை டிரம்ப் ஆதரித்து பேசி வந்தார்.
4பி இயக்கம்
இதனால் டொனால்டு டிரம்ப்பின் வெற்றி அங்குள்ள பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும் ஆண்கள்தான் பெரும்பான்மையாக டிரம்பிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததாக அமெரிக்க பெண்கள் நம்புகின்றனர்.
இதனால் அமெரிக்க பெண்கள் ஆண்களை தண்டிக்கும் விதமாக தென் கொரியாவின் 4பி இயக்கத்தில் இணைய முடிவெடுத்துள்ளனர். அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே 4பி இயக்கம் அமெரிக்க சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.
Bi என்றால் கொரிய மொழியில் இல்லை என்று பொருள். டேட்டிங், செக்ஸ், திருமணம், குழந்தை ஆகிய 4 விஷயங்களையும் ஆண்களுக்கு மறுப்பதாகும். #MeToo இயக்கத்தைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் 4பி இயக்கமும் மிகவும் தீவிரமடைந்தது. தென் கொரியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் வழிமுறையாக 4பி இயக்கம் உருவெடுத்துள்ளது.