வேளாண் பட்ஜெட் 2023 ; தக்காளி, வெங்காயத்திற்கு 48 கோடி ஒதுக்கீடு

Onion Tomato Government of Tamil Nadu
By Thahir Mar 21, 2023 06:00 AM GMT
Report

2023 - 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டு வருகிறார்.

வேளாண் பட்ஜெட் 2023 ; தக்காளி, வெங்காயத்திற்கு 48 கோடி ஒதுக்கீடு | 48 Crore Allocation For Tomato And Onion

வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் 

பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து, கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.

பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக கடலூர் மாவட்டம் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி.

மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்

3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்; ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம்.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் உற்பத்திக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு

4300 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது; மதுரை மல்லிகை இயக்கத்துக்கு ரூ7 கோடி ஒதுக்கீடு.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை

கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவுகளில் இயற்கை உரம் தயாரிக்க ரூ3 கோடி நிதி.

ரூ. 33 கோடியில் எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் திட்டம்.

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்-2.0 செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு.

ரூ. 12 கோடியில் பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை.

சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு.

தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு.

வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு.

வேளாண் பட்ஜெட் 2023 ; தக்காளி, வெங்காயத்திற்கு 48 கோடி ஒதுக்கீடு | 48 Crore Allocation For Tomato And Onion

முருங்கை இயக்கம்

தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 எக்டரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.

மிளகாய் மண்டலம்

இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிப்பு.