Chess Olympiad 2022 Anthem : 44வது செஸ் ஒலிம்பியாடுக்கான Anthem வெளியானது
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் | 44வது செஸ் ஒலிம்பியாடுக்கான Anthem வெளியானது.
இதில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இணைந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருமாறு செஸ் வீரர்களை அழைப்பது போல காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.44TH Chess Olympiad 2022 Anthem தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.