வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் சோமாலியா - 43 ஆயிரம் பேர் உயிரிழந்த சோகம் !!

Death Somalia
By Thahir Mar 22, 2023 10:32 AM GMT
Report

சோமாலியா நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் வறட்சி 

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு சோமாலியா. இங்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக மழை பெய்யாமல் தண்ணீர் இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டால் ,பசி பட்டினி அதிகரித்துள்ளதால் மக்கள் ஒரு வேளை உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.

43 thousand people died in Somalia

ஐநாவின் அறிக்கையின் படி சோமாளிய நாட்டில் 17 மில்லியன் மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுவதாக தெரியவருகிறது.

அதிகளவில் குழந்தைகள் உயிரிழப்பு 

லண்டனை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் , வறட்சியின் காரணமாக கடந்த ஆண்டு உயிர் இழந்தவர்களில் 50 சதவீதத்தினர் 5-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் என ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது 2017 மற்றும் 2018 ஆண்டுகளை விட அதிகமான உயிரிழப்புகள் என்றும், இந்த ஆண்டு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.