1 சிக்ஸர் கூட அடிக்காமல் 20 ஓவரில் 427 ரன்கள் - மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
அர்ஜென்டினா சாதனை
கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆனால் மற்ற நாடுகளும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அணிகளை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் தங்களை போன்ற மற்ற நாட்டு அணிகளுடன் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.
அதில் சில சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வகையில் அர்ஜென்டினாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிலி அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பேட்டிங் செய்த அர்ஜென்டினா மகளிர் அணி 20 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
சிலி அணி தோல்வி
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அர்ஜென்டினா அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. அவர்கள் தரப்பில் லூசியா டெய்லர் 84 பந்தில் 169 ரன்னும், அல்பர்ட்டினா காலென் 84 பந்தில் 145 ரன்னும், மரியா 16 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 428 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிலி அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 63 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அர்ஜென்டினா அணியின் இந்த சாதனை இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
? WORLD RECORD ALERT
— Women’s CricZone (@WomensCricZone) October 13, 2023
Argentina with the highest team score & opener Lucia Taylor with the highest T20I individual score ?
Previous best: Bahrain 318/1 & Deepika Rasangika (BAH) 161*
Argentina 427/1 (20) v Chile
Lucia Taylor 169
Albertina Galan 145*
?: @flamingosarg pic.twitter.com/LJeHpnwZL9