இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி பலி - நடுங்கவைக்கும் சம்பவம்!
ஹஜ் யாத்திரை சென்ற 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரை
தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதீனா அருகே உள்ள முப்ரிஹாத் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
42 பேர் பலி
இதில், பேருந்தில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 18 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் 42 பேரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. நள்ளிரவில் பயணிகள் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது தீப்பிடித்ததால் அவர்கள் தப்பிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.