16வயது சிறுவன் மீது 41வயது பெண்ணுக்கு காதல்; திருமணம் செய்து வைத்த மகனின் தாயார் - இறுதியில் ஏற்பட்ட சோகம்!
16 வயது சிறுவனை 41 வயது பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை திருமணம்
இந்தோனேசியா கலிமந்தன் மாகாணத்தை சேர்ந்தவர் லிசா (37). இவருக்கு கெவின் என்ற 16 வயதுடைய மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே அதே பகுதியில் வசிக்கும் லிசாவின் நெருங்கிய தோழியான மரியானா (41) என்ற பெண்ணின் கடைக்கு கெவின் தின்பண்டங்கள் வாங்க அடிக்கடி சென்றுள்ளார்.
இவர்கள் இருவரின் வீடும் சில அடி தூரத்தில்தான் இருந்துள்ளது. அப்போதிலிருந்தே மரியானாவுக்கு இந்த சிறுவனின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனும் மரியானாவும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த திருமணத்தில் மகன் கெவின் தன்னை விட 25 வயது மூத்த மரியானாவை மணந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை தாயார் லிசாவும் பகிர்ந்துள்ளார். இந்த திருமணத்திற்கு கெவின் சம்மதம் தெரிவித்ததாகவும், மரியானவொடு இருக்கும் சொத்துக்களுக்காக தனது மகனை திருமணம் செய்ய வைத்தார் என்று வெளியான தகவல்களை வதந்தி என்றும் லிசா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் 4வது நாளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. திருமணம் குறித்த செய்தி வைரலாக நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் பேசு பொருளானது. மேற்கு கலிமந்தனில் உள்ள இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.
இந்தோனேசியாவில் ஒரு ஆண் மற்றும் பெண் 21 வயதை அடையும்போது பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது சட்டம். ஆகவே இந்த வழக்கில் சிறுவனை திருமணம் செய்ததிற்காக மரியானா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் பயந்து போன சிறுவனின் தாயார் மரியானவை விவாகரத்து செய்து விடுமாறு மகனிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.