கடவுளை பார்க்கலாம் வாங்க - 400 பேரை கொன்று குவித்த மத போதகர்

Kenya
By Karthikraja Sep 15, 2024 08:12 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

கடவுளை காணலாம் என 400 க்கு மேற்ப்பட்டோர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்துள்ளனர்.

கென்யா

உலகம் முழுவதும் மதத்தின் பெயரில் பல்வேறு மூட நம்பிக்கை செயல்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடவுளை காண ஆசைப்பட்டு 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

kenya death

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவின் ஷகாஹோலா(Shakahola Forest) காட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

400 சடலங்கள்

இதனையடுத்து 800 ஏக்க பரப்பளவில் உள்ள இந்த காட்டில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் 400 க்கு மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 190 பேர் குழந்தைகள் ஆவார்கள். விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 'குட் நியூஸ் இன்டர்நேஷனல்' தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு வருபவர்கள் என தெரிய வந்துள்ளது. 

kenya paul mackenzie

இதனையடுத்து அந்த தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள பால் மெகன்சி என்பவரிடம் நடத்திய விசாரணையில் பலவீனமான மனம் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் பட்டினி கிடந்தால் இயேசுவை சந்திக்க முடியும் என கூறியதாகவும் அதை தொடர்ந்து, மக்கள் பட்டினி கிடந்து உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதன் பின் பாதிரியார் பால் மெகன்சி(paul mackenzie) கைது செய்யப்பட்டார்.

ஓராண்டாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது. விசாரணையில் அலட்சியமாக இருந்த 6 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 600 பேர் காணாமல் போயுள்ளனர். பால் மாக்கன்சி பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.