ஆண்மையை அதிகரிக்கும் கழுதை கறி? : ஆந்திராவில் 11 பேர் கைது

Andhra Pradesh Crime
By Irumporai Oct 11, 2022 07:38 AM GMT
Report

தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறி விரும்பி சாப்பிடப்படுகிறது. இதற்கு அரசு கடை விதித்த போதிலும் சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து கறி விற்பனை செய்து வருகின்றனர்.

 ஆண்மையை அதிகரிக்கும் கழுதை கறி

கழுதை கறி மூலம் வேகம், வலிமை, மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக ஆண்மை சக்தியை அதிகரிக்கும் என கூறுகின்றனர். இதனால் கழுதை வெட்டப்படும் இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் .

குறிப்பாக ஒரு கிலோ கழுதை கறி ரூ 700 என கூறப்படுகிறது. ஆகவே சட்ட விரோதமாக கழுதை கடைகள் நடத்தப்படுவதாக விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் கி்டைத்தது அவர்கள் அதன்படி பாபட்லா மாவட்டத்தில்  4 இடங்களில் சோதனை நடத்தினர்.  

400 கிலோ கறி பறிமுதல்

அங்கு கழுதைகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் கறிகளை வைத்து விற்பனை செய்த 11 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.  

சட்டப்படி குற்றம்

இதே போல் அருகே உள்ள இடங்களிலும் சோதனை நடத்தி கைதானவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்மையை அதிகரிக்கும் கழுதை கறி? : ஆந்திராவில் 11 பேர் கைது | 400 Kg Of Donkey Curry Seized In Andhra

இந்திய அரசின் சட்டப்படி கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டத்தை மீறுவதாகும், மேலும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டபடி கழுதை இறைச்சி சாப்பிடுவதும் சட்டவிரோதமானது.

பொதுமக்கள் கழுதை இறைச்சிகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.