8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர் - மனைவி உடந்தை?
40 வயதைச் சேர்ந்த நபர் ஒருவர், 8ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணம்
தெலங்கானா, நந்திகமாவில் 40 வயதுடைய நபர் ஒருவருக்கும் 13 வயது சிறுமி ஒருவருக்கும் சட்டவிரோதமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த திருமணச் சடங்குகளை ஏற்பாடு செய்ய உதவிய இடைத்தரகர், பாதிரியார், 40 வயது நபர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணை
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் என்பது மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்று.
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் அறிக்கையின்படி, அதை ஒழிக்க 2006ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இருந்தபோதிலும், இது சில மாநிலங்களில் பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.