குரங்குகிற்கு உணவு கொடுத்துவிட்டு குழந்தைப் போல சிரித்த 40 வயது குள்ள மனிதர்... - வைரலாகும் க்யூட் வீடியோ
குரங்குகிற்கு உணவு கொடுத்துவிட்டு குழந்தைப் போல சிரித்த 40 வயது குள்ள மனிதரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைப் போல சிரித்த 40 வயது குள்ள மனிதர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 40 வயது குள்ள மனிதர் ஒரு ஓட்டலில் வந்த குரங்கிடம் உணவு கொடுக்கிறார். உணவு அளித்த பிறகு அந்த குரங்கிடம் தன் கையை நீட்டி கைகுலுக்க முயற்சிக்கிறார். குரங்கு பசியாக இருப்பதை உணர்ந்த அவர் மீண்டும் பழத்தை கொடுக்கிறார். அந்த பழத்தை வாங்கி குரங்கு சாப்பிட்டபோது குழந்தை போலவே சிரிக்கிறார். இவர் சிரித்ததைப் பார்த்த அங்கு கூடியிருந்தவர்களும் சிரித்துவிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... இவரை நான் குழந்தையென்றே ஒரு நொடி நினைத்துவிட்டேன்.. அதன் பிறகுதான் தெரிகிறது... இவர் 40 வயது குள்ள மனிதர் என்று... கமெண்ட் செய்து வருகின்றனர்.
This is a 40 year old man pic.twitter.com/IQ7LRHBliZ
— Hasbulla ? (@HasbullaHive) December 14, 2022