40க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அடித்து கொலை - கொடூர சம்பவம்

Thanjavur
By Sumathi Apr 12, 2023 05:05 AM GMT
Report

40க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்கள்

தஞ்சாவூர், கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில், தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிமாக இருப்பதால் சாலையின் குறுக்கே அடிக்கடி சென்று இருசக்கர விபத்துக்களை ஏற்படுவதாக தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

40க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அடித்து கொலை - கொடூர சம்பவம் | 40 Stray Dogs Killed In Kumbakonam

இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி சுற்றித்திரியும் தெரு நாய்களை நள்ளிரவில் சுருக்கு கம்பி வைத்து சிலர் பிடித்து அடித்து கொண்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடித்து கொலை

இது குறித்து ஊராட்சி தலைவர் வெற்றிச்செல்வி கூறியபோது, பட்டீஸ்வரம் ஊராட்சியில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டதாகவும் சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்ந்து இருசக்கர வாகனம் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி விடுவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் பெயரில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. என் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக சிலர் தெருநாய்களை பிடித்தவர்களை முற்றுகையிட்டு தகராறு செய்துள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டு தெருநாய்கள் பிடிப்பதை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தார்.