யாருக்கும் பயப்பட மாட்டேன் 40 கல்யாணம் பண்ணுவேன்: நடிகர் வனிதா பரபரப்பு பேட்டி!

vanitha interviw
By Irumporai Jul 23, 2021 05:26 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌.

திருமணமாகி இரண்டு முறை விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

யாருக்கும் பயப்பட மாட்டேன் 40 கல்யாணம் பண்ணுவேன்: நடிகர் வனிதா பரபரப்பு பேட்டி! | 40 Married Actor Vanitha Sensational Interview

இந்நிலையில் வனிதா பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதனால் வனிதா 4 வதாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில் வனிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் அதை யாரும் பேசுவதில்லை, பெண்கள் செய்தால் மட்டும்பேசுகின்றனர்.

நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், எதற்கும் அச்சப்பட மாட்டேன். எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன்.

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம் திரைப்படத்துக்கானது. விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.