ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 40 பேரின் உடலில் எந்த காயமும் இல்லை - வெளியான திடுக்கிடும் தகவல்..!
ஒடிசா ரயில் விபத்து நடந்த போது இறந்த 40 பேரில் உடலில் எந்த காயமும் இல்லை என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
288 பேர் உயிரிழப்பு
கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி தடம் புரண்டது. ரயில் மோதிக் கொண்ட விபத்தில் சுமார் 288 பேர் உயிரிழந்ததாகவும் 1,275 பேர் காயமடைந்ததாகவும் அரசு அறிவித்துள்ளது.
40 பேரின் உடலில் காயம் இல்லை
இந்த நிலையில் 90க்கும் மேற்பட்ட உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாததால் மரபணு சோதனைக்கு உட்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த 40 பேரில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.