தவறுதலாக திருகப்பட்ட ஆக்சிலேட்டர் - 4 வயது சிறுமி பரிதாப பலி
தவறுதலாக ஆக்சிலேட்டரை திருகிய சிறுமி உயிரிழந்துள்ளார்.
4 வயது சிறுமி
சென்னை சைதாப்பேட்டை சாஸ்திரி முதல் தெருவில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான பத்மநாபன் (67 வயது) வசித்து வருகிறார். அம்பத்தூர் துரைசாமி ரெட்டி தெருவில் வசித்து வரும் இவரது பேத்திகள் இருவரும், விடுமுறை நாட்களில் பத்மநாபனின் வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் பத்மநாபன் தனது 4 வயது பேத்தியை இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வாகனத்தை இயக்கிய நிலையிலே வைத்து விட்டு பத்மநாபன் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
ஆக்சிலேட்டர்
அப்போது வாகனத்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமி தெரியாமல் ஆக்சிலேட்டரை திருகியதில் வாகனம் சீறி பாய்ந்து அருகே உள்ள கடை மீது மோதி கீழே விழுந்துள்ளது. வாகனத்தை பிடிக்க சென்ற தாத்தாவும் கீழே விழுந்துள்ளார்.
அருகே இருந்தவர்கள் வாகனத்தை தூக்கி அந்த சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சிறுமியின் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.