4 வயது சிறுமியை துடிக்க துடிக்க பாலியல் வன்கொடுமை செய்த 64 வயது முதியவர் - அதிரடி காட்டிய நீதிமன்றம்
arrest
Sexual abuse
பாலியல் வன்கொடுமை
கைது
4 year old girl
64 years old
5 years imprisonment
4 வயது சிறுமி
64 வயது முதியவர்
By Nandhini
புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சிவா (64). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து புளியந்தோப்பு போலீசார் முதியவர் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ராஜலட்சுமி முன்பு வந்தது.
இதனையடுத்து, முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.