குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

Chennai Death
By Thahir Sep 01, 2022 06:22 AM GMT
Report

சென்னை அருகே குதிரை எட்டி உதைத்ததில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழப்பு 

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்பல் சங்கர் நகர் 30வது தெருவில் வசித்து வருபவர் டெல்லி ராஜ் இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் இரண்டாவது மகன் கௌதம் கிருஷ்ணா வயது 4.

சிறுவன் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது மேய்ந்து கொண்டிருந்த குதிரை ஒன்று கௌதம் கிருஷ்ணாவின் மார்பில் எட்டி உதைத்துள்ளது. இதனால் வலியில் துடித்துடித்து அழுத சிறுவன் மயங்கி கிழே விழுந்தான்.

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு | 4 Year Old Boy Died After Being Kicked By A Horse

இதையடுத்து சிறுவனை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.