4 வயது குழந்தையுடன் குடும்பமே தூக்கில் தொங்கிய கொடூரம் - அதிர்ச்சி சம்பவம்
கேரளாவில் 4 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு, தாயும், தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி கிருஷ்ணேந்து. இத் தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆதவ கிருஷ்ண என்ற மகன் இருக்கிறான் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சுனில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அவர்களது பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்து அங்கு சென்று கதவை தட்டியிருக்கிறார்கள்.
கதவை தட்டியதும் கதவு தானாக திறந்து கொண்டிருக்கிறது. உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். பேரன் ஆதவ கிருஷ்ணன் தூக்கில் பிணமாக கொண்டிருந்திருக்கிறார்.
அறையில் சுனிலும் அவரது மனைவியும் சடலமாக கிடந்திருக்கின்றனர்.
இதை பார்த்த சுனிலின் பெற்றோர்கள் பரவூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .