மெரினா கடற்கரையில் 4 சமாதியை யார் இடிப்பது? சீறிய சீமான்
கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? என சீமான் ஆவேசம் தெரிவித்துள்ளார்.
அனகாபுத்தூர் விவகாரம்
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அங்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போ இங்க ஆக்கிரமிப்பு பண்ணிட்டாங்கன்னு சொல்லி அப்புறப்படுத்துறாங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் வருகிறது. அந்த மக்களுக்கும் அந்த கேள்வி தான். இது நீர் நிலைப் பகுதி என்று தெரிகிறது. அப்போது அதை ஆக்கிரமித்து கட்டும்போது யாரும் ஏன் தடுக்கவில்லை.
அப்போது எல்லாரும் என்ன பண்ணிக்கொண்டு இருந்தீங்க. ஆக்கிரமிக்கும் போதே தடுத்திருந்திருக்கலாம். ஆ.. ஊன்னா அதிகாரம் படைத்தவர்கள் நீதிமன்றத்தை கை காட்டி விடுகிறார்கள். உங்கள் பலருக்கும், மனசாட்சி உள்ள எல்லாருக்கும் தெரியும். பல நீதிமன்றங்களே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு.
சீமான் ஆவேசம்
குறிப்பாக மதுரை உயநீதிமன்ற கிளை, திருவள்ளூர் நீதிமன்றம் என பல இடங்கள், பல அரசு குடியிருப்புகள், வள்ளுவர் கோட்டமே.. இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே? கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? அது ஆக்கிரமிப்பா இல்லையா?
மனசான்று இருக்க யாராவது சொல்லுங்க பார்ப்போம். ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களே? கடற்கரை கடற்கரை தானே.. இது எப்படி கல்லறைகளாக மாறியது.. இதை ஏன் யாரும் கேட்கவில்லை.. உலகின் தலைசிறந்த கடற்கரையில் 2வது கடற்கரை ஆஸ்திரேலியாவுக்கு பிறகு சென்னை கடற்கரை.
எப்படி சில பேருக்கு இது கல்லறையாக மாறியது. எம் எம் டிஏ காலனி மாதிரி பல அரசு கட்டிடங்களே நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கிறது. வேண்டும் என்றால் வாங்க காட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.