பாலத்தில் குப்பைகளை அகற்றிய போது நேர்ந்த சோகம் - ரயில் மோதி 4 தமிழர்கள் பரிதாப பலி

Tamil nadu Kerala Indian Railways Death
By Karthikraja Nov 02, 2024 12:16 PM GMT
Report

 ரயில் மோதியதில் கேரளாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள்

சேலத்தை சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

kerala train accident tamils death

இந்நிலையில் கேரள மாநிலம் ஷோர்னூரில் பாரதப்புழா ஆற்றில் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தனர்.

4 பேர் பலி

அப்போது அந்த ரயில்வே பாலத்தில் வந்த டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் இவர்கள் மீது மோதியதில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

kerala train accident

உயிரிழந்தவர்கள் சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ரயில் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்தவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.