கலப்படம் பன்னீரை கண்டறிவது எப்படி? வீட்டில் உள்ள இந்த பொருள்கள் போதும் - ட்ரை பண்ணி பாருங்க!
பன்னீர் சாப்பிட்ட பிறகுச் சற்று கடினமாகவோ அல்லது காரமாகவோ உணர்ந்தால், அதில் செயற்கைப் பொருட்கள் இருக்கலாம்.
பனீர்
பொதுவாகப் பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும் . பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படிச் செய்தாலும் இது சுவை மிகுந்தது. பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா ?அல்லது உண்மையானதா என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் பனீரை ஒரு தட்டில் வைத்து, மிக லேசான அழுத்தத்துடன் உங்கள் உள்ளங்கையை வைத்து நசுக்க முயற்சிக்கவும். அப்போது பனீர் பிரிந்து வந்தால் அல்லது உடைந்தால், அதில் கலப்படம் இல்லை என்று அர்த்தம். இல்லாவிட்டால் அதில் கலப்படம் செய்யப்பட்டதற்கு வாய்ப்பு உள்ளது.
கலப்படம்
உண்மையில், போலி பன்னீரில் காணப்படும் பொருட்கள் பாலின் குணங்களை அழித்து கடினமாக்குகின்றன. இரண்டாவது முறை பனீரை சிறிதளவு எடுத்து தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஒரு தட்டில் வைக்கவும். ஆறிய பிறகு மேலே சில துளிகள் அயோடின் சேர்க்கவும்.
இப்போது பன்னீரின் நிறம் நீலமாக மாறினால், பாலில் செயற்கைப் பொருட்களைச் சேர்த்து பனீர் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக பனீர் சாப்பிட்ட பிறகுச் சற்று கடினமாகவோ அல்லது காரமாகவோ உணர்ந்தால், அதில் செயற்கைப் பொருட்கள் இருக்கலாம்.