நாடாளுமனற தேர்தல் - பாஜக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை தொகுதிகள்?
பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வருகை புரிந்தார்.அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
எத்தனை தொகுதிகள்?
முன்னதாக அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.