4 மாணவிகள் பலி - முதலமைச்சர் தலா 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Tamil nadu Death
By Sumathi Feb 15, 2023 08:57 AM GMT
Report

 காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளும் உயிரிழந்தனர்.

மாயமான மாணவிகள்

கரூர், தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டிக்காக விராலிமலை அரசுப் பள்ளியில் இருந்து 15பேர் உடற்கல்வி ஆசிரியரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

4 மாணவிகள் பலி - முதலமைச்சர் தலா 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு | 4 Schoolgirls Drowned In Cauvery River Died

அதனைத் தொடர்ந்து, மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் வந்துள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.

சடலமாக மீட்பு

அதனையடுத்து, தீயணைப்பு படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் சுழல் இருப்பதை அறியாமல் இறங்கியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் பெற்றோர் பள்ளியில் மயக்கமடைந்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.