தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக விலை: எவ்வளவு தெரியுமா?
2022 ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி 4 வீரர்களை தக்க வைப்பதாக அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களின் ஊதியமாக முறையே ரூ. 16 கோடி, ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வீதம் என்று மொத்தம் ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும் அணி நிர்வாகம் ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The @ChennaiIPL retention list is out! ?
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Take a look! ?#VIVOIPLRetention pic.twitter.com/3uyOJeabb6
அதன்படி, சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரவிந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை சென்னை அணி தக்கவைத்துள்ளது.
இதற்காக ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியும், தோனிக்கு ரூ.12 கோடியும், மொயின் அலிக்கு ரூ.8 கோடியும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.6 கோடியும் சிஎஸ்கே நிர்வாகம் செலவிட்டுள்ளது. இதன்மூலம் தோனியை ஜடேஜா பின்னுக்கு தள்ளியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.