ஒரே நேர்கோட்டில் 4 கிரகங்கள் - நாசா வெளியிட்ட அரிய புகைப்படங்கள்

NASA Viral Photos
By Thahir Feb 26, 2023 08:50 AM GMT
Report

சர்வதேச விண்வெளி நிலையித்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே நேர்கோட்டில் 4 கிரகங்கள்

வானில் ஏற்படும் அரிய நிகழ்வுகள் எப்பொழுதும் நமக்கு ஒருவித உற்சாக உணர்வை தரும். இந்நிலையில், விண்வெளி கிரகங்களான வியாழன்,வெள்ளி பூமியின் துணை கோளான நிலவு, மற்றும் பூமி எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிதினும் அரிதான புகைப்படதை நாசா(NASA) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

4-planets-in-the-same-straight-line

மேற்கு வானத்தில் ஒரு சந்திப்பு நடக்கிறது, பிறை சந்திரன் வியாழனுக்கு அருகில் அமர்ந்து, அவர்களுக்கு கீழே வீனஸ் உள்ளது.

வியாழன் மற்றும் வீனஸ் கிரகங்கள் மார்ச் 1 வரை நெருக்கமாக இருக்கும். இதனை பூமியில் இருந்து பார்த்து ரசிக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.