உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை - எப்படி தெரியுமா?
4 மாத பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 மாத குழந்தை
சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரது மனைவி ஈஸ்வரி (26). இவர்களுக்கு ஆதிரை என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், குழந்தைக்கு, மூன்று மாதம் முடிந்ததும் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை காட்டி, ஈஸ்வரி பயிற்சி அளித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பயிற்சியால் நான்காவது மாதத்தில், 32 நாடுகளின் கொடியை, ஆதிரை சரியாக தொட்டு காட்டினார்.
உலக சாதனை
இந்நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த ஈஸ்வரி, 'நோபல்' உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பியுள்ளார். இதை ஆராய்ந்து, நோபல் உலக சாதனை புத்தகத்தில், ஆதிரையின் பதிவு இடம்பிடித்துள்ளது. மேலும் ஆதிரைக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை, ஈஸ்வரி, அவரது குடும்பத்தினருடன் சென்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அதிமுக., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரிடம் காட்டி மகிழ்ந்தார். தற்போது பலர் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.