4 மாத பச்சிளங் குழந்தையை கடத்தி ரயில் நிலையத்தில் வைத்து பிச்சை எடுத்த அரக்கி!
ஆந்திராவில் 4 மாத பச்சிளங் குழந்தையை கடத்தி வெயிலில் பிச்சை எடுத்த கொடூர அரக்கியை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மலையடிவாரத்தில் அன்றாடம் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தவர் கங்குலம்மா.இதே பேருந்துநிலையத்தில் மைசூரை சேர்ந்த ஆஷா பிச்சை எடுத்து பிழைத்து வந்தார்.
திறந்த வெளியில் வசிப்பவர்கள் என்பதால், கடந்த 2-ம் தேதி அன்று தனது 4 மாத குழந்தையை ஆஷாவிடம் ஒப்படைத்துவிட்டு குளிக்க சென்றிருக்கிறார் கங்குலம்மா.
குளித்துவிட்டு திரும்பி வந்தபோது தனது குழந்தையை காணவில்லை. ஆஷாவையும் காணவில்லை. அக்கம் பக்கம் முழுவதும் தேடியும் இருவரையும் காணவில்லை என்பதால், போலீசாரிடம் புகாரளித்தார் கங்குலம்மா.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷாவின் சொந்த ஊரான மைசூருக்கு விரைந்தனர். அப்போது அந்த கைக்குழந்தையை வைத்து ரயில் நிலையத்தில் ஆஷா பிச்சை எடுப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு கங்குலம்மாவிடம் ஒப்படைத்தனர்.