வங்கதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை
4 Members Killed in Bangladesh: வங்கதேசத்தில் 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் ரங்க்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்தம்பதியின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரியம் (12).
கடந்த சில நாட்களாக இவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை, அத்துடன் வீ்டும் வெளிப்புறமாக பூட்டியே கிடந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார் அளித்தனர், இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு போலிசார் வந்து சோதனை செய்த போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கணபதி இருந்துள்ளார்.

மற்ற மூவரும் சடலமாக கிடந்துள்ளனர், இதனைதொடர்ந்து போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதுகுறித்து ரங்க்பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்துல் மபூத், கடந்த வியாழன்று இரவு முக்தோ மற்றும் சித்தார்த்தா ஆகிய இருவர் வீட்டின் மாடிக்கு சென்று போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்.
சத்தம் கேட்டு மாடிக்கு சென்ற கணபதி அவர்களை கண்டித்துள்ளார், போதையில் அவரை கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.
அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, அவரது மனைவி மகளையும் அதே பாணியில் கொன்றுள்ளனர், பின் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர், தற்போது அவர்களை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.