Sunday, Jul 13, 2025

தொடர்கதையான கட்சி நிர்வாகிகள் கைது!!4 பேர் கொண்ட குழு!! திமுகவை அதிரவைக்கும் பாஜக!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick 2 years ago
Report

பாஜகவின் தமிழக கட்சி நிர்வாகிகள் கைதாகி வருவது தொடர்கதையான நிலையில், இது குறித்து ஆய்வு மேற்கொள்ள 4 பேர் கொண்ட தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கைதாகும் பாஜகவினர்

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவின் வேகம் தற்போது இருக்கின்றது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் திமுக அரசை குறித்து கடுமையாக விமர்சனம் செய்வது, கட்சி பணிகளை அங்கங்கே அவ்வப்போது நடத்துவது என பாஜக தற்போது தமிழகத்தில் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.

4-member-team-formed-for-bjp-members-arrest-in-tn

இதற்கிடையில், தமிழக பாஜக உறுப்பினர்கள் அவ்வப்போது கைதாவதும் தொடர்கதையாகி இருக்கின்றது. அக்கட்சியின் எஸ்.ஜி.சூர்யா, தற்போது கொடிக்கம்ப விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கையாக பார்க்கப்படும் அமர் பிரசாத் ரெட்டி கைதானது பெரும் சலசலப்பை பாஜக வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது.

4 பேர் கொண்ட குழு அமைப்பு

இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஊழல் திமுக அரசின் கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற நடத்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்ததற்கு தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு தமிழக பாஜக சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாசிசப் போக்கை மட்டுமே காட்டி வருகிறது.

4-member-team-formed-for-bjp-members-arrest-in-tn

தமிழக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இதில் பெரும்பாலான வழக்குகள் உள்ளூர் திமுக நிர்வாகிகளால் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் ஊழல் திமுக அமைச்சர்களை திருப்திப்படுத்தும் வகையில் கைது செய்ய கோரி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கைது செய்வது, ஜாமீன் வரும்போது அற்ப குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சுமத்துவது, வார இறுதி நாட்களையொட்டி கைது செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். எனவே கடந்த 30 மாதங்களில் திமுக அரசின் அத்துமீறல்களையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழு வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் டி.வி. சதானந்த கவுடா, சத்ய பால் சிங், ஸ்ரீமதி. டி.புரந்தேஸ்வரி மற்றும் ஸ்ரீ பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.