4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு - பொதுமக்கள் வியப்பு!
அருப்புக்கோட்டை அருகே நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சொக்கம்பட்டியை சேர்ந்த சோலைமலை, கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதோடு, ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி ஒன்று நான்காவது முறையாக பத்து முட்டைகள் போட்டு அடைகாத்து குஞ்சு பொரித்தது.
அதில் அதிசயமாய் ஒரு கோழிக்குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. நான்கு கால்களுடன் பிறந்தாலும் அந்த கோழிக்குஞ்சு ஆரோக்கியமாக தாயுடனும் மற்ற கோழிக்குஞ்சுகளுடனும் இணைந்து விளையாடி வருகிறது.
நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராம மக்கள் சோலைமலையின் வீட்டிற்கு வந்து அதிசய கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.