இலங்கைக்கு இதுவரை 4 லட்சம் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளது - இந்திய துாதரகம்..!

By Thahir May 15, 2022 08:33 PM GMT
Report

இலங்கைக்கு இதுவரை 4 லட்சம் டன் டீசல் அனுப்பியுள்ளதாக இந்திய துாதரகம் தகவல் தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்காடியால் இலங்கை நாடு சிக்கி தவித்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது.இதில் கடன் எல்லை மற்றும் கடன் மாற்று திட்டங்கள் மூலம் 3 பில்லியன் டாலருக்கு மேல் கடனுதவி வழங்கி இருக்கிறது.

அத்துடன் கடன் எல்லைக்கு உட்பட்டு டீசலும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடைசியாக நேற்றும் இந்தியா வழங்கிய டீசலுடன் கப்பல் ஒன்று இலங்கை போய் சேர்ந்து உள்ளது.

இதையும் சேர்த்து இந்தியா இதுவரை 4 லட்சம் டன்னுக்கு மேல் இலங்கைக்கு டீசல் உதவி வழங்கியிருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.