நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் சூறாவளி - ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலி…!

Viral Video New Zealand
By Nandhini Feb 16, 2023 07:50 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் சூறாவளியின் பேரழிவில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நியூசிலாந்தை புரட்டிப்போட்ட கேப்ரியல் புயல்

சமீபத்தில் நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. கேப்ரியல் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், அந்நாட்டு அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. ஆக்லாந்து மற்றும் நார்த்லேண்ட்டில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாயின.

4-killed-cyclone-gabrielle-in-new-zealand

சூறாவளியின் பேரழிவு - 5 பேர் பலி

இந்த கேப்ரியல் சூறாவளியின் பேரழிவில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதம மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் பேசுகையில்,

கேப்ரியல் நியூசிலாந்தில் இருந்து வெளியேறினார், ஆனால் சுமார் 10,500 பேர் இன்னும் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த நூற்றாண்டில் நாட்டைத் தாக்கிய மிகப்பெரிய வானிலை நிகழ்வு இது. நாட்டின் 5 மில்லியன் மக்கள்தொகையில் குறைந்தது 3ல் ஒரு பகுதியையாவது இது பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு தீவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலோர பகுதிகளில் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஹாக்ஸ் பே, கோரமண்டல் மற்றும் நார்த்லேண்ட் போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையில், நியூசிலாந்தில் நேற்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் வெலிங்டனுக்கு அருகிலுள்ள வடக்குத் தீவின் கரையோரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.