துபாய் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - இந்தியர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி உயிரிழப்பு

Dubai India Accident Death
By Thahir Apr 17, 2023 01:51 AM GMT
Report

துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி உட்பட நான்கு இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து 

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான அல்-ராஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் இறந்தனர் மற்றும் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்தில் இரத்தத்தில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

4 Indians killed in Dubai fire

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து போர்ட் சயீத் தீயணைப்பு நிலையம் மற்றும் ஹம்ரியா தீயணைப்பு நிலையத்தின் குழுக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியர்கள் 4 பேர் உயிரிழப்பு 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். 12.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2:42 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கு காரணம் என்னவென்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

மேலும், இந்த தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களில் ரிஜேஷ் கலங்கடன் (38) மற்றும் அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் (32) ஆகியோர், குடு சாலியகோண்டு (49) மற்றும் இமாம்காசிம் அப்துல் காதர் (43) ஆகியோர்அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.