“நீங்க 4 பேரும் வேண்டாம்.. இந்தியாவுக்கு வாங்க” - டி20 உலகக்கோப்பையில் திரும்ப அழைக்கப்பட்ட இந்திய வீரர்கள்
டி20 உலகக்கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் 4 வீரர்களை இந்தியா அழைக்க பிசிசிஐ முடிவு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வென்று உற்சாகத்துடன் உள்ள நிலையில் சூப்பர் 12 சுற்றில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது.
இதனிடையே ஐபிஎல் போட்டிக்கு பின் வீரர்கள் பயிற்சி பெற ஐக்கிய அமீரகத்தில் 8 நெட் பவுலர்களை பிசிசிஐ நிறுத்தி வைத்திருந்தது. அவர்களில் வெங்கடேஷ் ஐயர், கிருஷ்ணப்பா கவுதம், ஷதாப் நதீம் மற்றும் கரண் சர்மா ஆகியோர் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
அவேஷ் கான், லுகாமன் மரிவாலா, உம்ரான் மாலிக் மற்றுல் ஹர்ஷல் படேல் ஆகியோர் டி20 உலகக்கோப்பை முடியும் வரை நிரந்த பவுலர்களாக இருப்பார்கள். இந்தியாவிற்கு அனுப்பப்படும் அனைத்து வீரர்களும் அடுத்த மாதம் தொங்கும் சையது முஸ்டாக் அலி டிராபியில் தங்கள் மாநில அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan
