4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

Tamil nadu Death
By Sumathi Feb 15, 2023 12:24 PM GMT
Report

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச்சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர்.

4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் | 4 Girl Students Drowned In Cauvery River

போட்டியில் பங்கேற்றுவிட்டு கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கியுள்ளனர்.

சஸ்பெண்ட்

அதன்பின் தகவலளிக்கப்பட்டு விரைந்த தீயணைப்பு படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில், 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால்

பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஜெபசாய இப்ராஹிம், திலகவதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.