திடீரென வானில் தெரிந்த 4 பறக்கும் தட்டுகள்... UFO-வா? வேற்று கிரகவாசிகளா? - பரபரப்பு!

Tamil nadu Chennai Viral Photos
By Vinothini Aug 01, 2023 04:55 AM GMT
Report

சென்னைக்கு அருகே வானில் பரந்த பறக்கும் தட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேற்று கிரகவாசிகள்

உலகம் முழுவதுமே ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா இந்த ஆராய்ச்சியில் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருகிறது.

4-flying-saucers-found-near-chennai

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அங்குள்ள பாராளுமன்றத்தில் அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் இது தொடர்பாக பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். தற்பொழுது சென்னைக்கு அடுத்து உள்ள முட்டுக்காடு கடல் பகுதியில் கடந்த 26-ம் தேதி மாலையில் மர்மமான முறையில் நான்கு பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளன.

பறக்கும் தட்டுகள்

இந்நிலையில், வானில் வெளிச்சமாக தெரிந்த பறக்கும் தட்டுகளை ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தபோது அதில் பறக்கும் தட்டு போன்று நான்கு உருவம் தெரிந்துள்ளது.

4-flying-saucers-found-near-chennai

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதனை வெளியிட்டுள்ளார். இது குறித்து பறக்கும் தட்டு ஆராய்ச்சியாளரான சபீர் உசேன் கூறுகையில், "பறக்கும் தட்டுகள் ஆராய்ச்சிகளில் உலக நாடுகள் அனைத்துமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

பறக்கும் தட்டுகளை தற்போது ஏலியன்ஸ்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக உரிய ஆராய்ச்சிகளை நடத்தி இனிதான் கண்டுபிடிக்க முடியும்" என்று கூறியுள்ளார். இந்த சப்பினவாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.