தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பலி
கோவில்பட்டி அருகே துறையூரில் தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலைக்கு காலை முதலே பணியாட்கள் வேலைக்கு வர தொடங்கி பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது.
மதிய உணவு இடைவெளி பின்பு ஆலையில் இயங்கி வந்த தனி அறையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பு நடைபெற்று கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்ததுடன் வெடி வெடித்ததில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த ராமர், ஜெயராஜ்,
குமாரகிரியை சேர்ந்த தங்கவேல், நாலாட்டின்புதூரை சேர்ந்த கண்ணன் ஆகிய 4 பேர் உடல் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேறு யாரேனும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கோட்டாட்சியர் சங்கரநாராயணர்,
தாசில்தார் அமுதா, காவல் கண்காணிப்பாளர் உதய சூரியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.