மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு
கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது, ரோசில்பட்டி பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் புதுவீடு கட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜெயசூரியா, கார்த்திக் ராஜா, முருகன், ஜக்கம்மா ஆகியோர் கட்டட வேலை செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.