தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாணவர்கள் உற்சாகம்
tamilnewyear
weekend
tnschools
holidaydeclared
By Swetha Subash
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 15-ந் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16-ந் தேதியும்(சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்து உள்ளார்.
சனிக்கிழமையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி மாணவர்கள் வார இறுதியை கழிக்க உள்ளனர்.