4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 4 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடியது.
சட்டப்பேரவை கூடியதும் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதாயளனுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து துறை அமைச்சர்கள் கேள்வி நேரத்திற்கு பதில் அளித்து வருகின்றனர். உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய தொழித்துறை அமைச்சர் அவிநாசியில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த சுமூக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டமும் தமிழ்நாட்டில் கொண்டுவரப்படாது. சங்கராபுரத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பெரியகருப்பன் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சமுதாயக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளுங்கட்சி,எதிர்கட்சி என்று பாராமல் அனைத்துத் தொகுதிகளிலும் சமுதாயக் கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவசரத் தேவை இருப்பின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும் என்றார்.
இதை அடுத்து பல்வேறு துறை அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.