பார்க்கிங் செய்யும் இடத்திற்கு ரூ.4 கோடியாம்.. ஏன் இப்படி, எங்கே தெரியுமா?

New York
By Sumathi Oct 04, 2024 10:28 AM GMT
Report

பார்க்கிங் செய்யும் இடத்திற்கு ரூ.4 கோடி வசூலிக்கப்படுவதாக சொன்னால் நம்பமுடிகிறதா?

பார்க்கிங் இடம்

நியூயார்க், மேற்கு கிராமத்தின்(West Village) சுற்றுப்புறத்தில், 150 சார்லஸ் ஸ்ட்ரீட் காண்டோ பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்களுக்கு டெவலப்பர் அலெக்ஸ் விட்காஃப், பிரத்யேக பார்க்கிங் இடங்களை அளிக்கிறது.

paston

இதன் விலை USD 500,000 (சுமார் ரூ. 4.19 கோடி). மற்றொரு கட்டடமான, 42 Crosby St., முன்னதாக $1 மில்லியன் பார்க்கிங் ஸ்பாட்களை வழங்கியது. இந்த இடங்களில் பார்க்கிங் வாடகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளன.

இனி வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தினால் அவ்வளவுதான்..நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!

இனி வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தினால் அவ்வளவுதான்..நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!

அதிக வசூல்

இந்நிலையில், பல இடங்களில் கேரேஜ்கள் இல்லை. இந்த பார்க்கிங் இடங்கள் வேகமாக விற்பனையாகி வருகிறது. இது காலப்போக்கில் மோசமாக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் செய்யும் இடத்திற்கு ரூ.4 கோடியாம்.. ஏன் இப்படி, எங்கே தெரியுமா? | 4 Crore For Car Parking Located In New York

இதற்கிடையில், ரியல் எஸ்டேட் முகவர் பெட்ஸி ஹெரால்ட், பாஸ்டனில் உள்ள பீக்கன் ஹில்லில் உள்ள பிரிம்மர் ஸ்ட்ரீட் கேரேஜில் 500,000(ரூ. 4 கோடி) அமெரிக்க டாலர்களுக்கு வாகன நிறுத்துமிடங்களை விற்பனை செய்துள்ளார்.

பணக்காரர்கள் தங்கள் சொகுசு வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங்கில் கணிசமான அளவு முதலீடு செய்யத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.