அமேசான் காட்டில் விபத்து : 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு

Amazon
By Irumporai May 18, 2023 04:53 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமேசான் காட்டில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 குழந்தைகள் உயிருடன் மீட்டுள்ளனர்.

விமான விபத்து

கொலம்பிய அமேசன் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது , இதில் பயணித்த 11மாத குழந்தை உட்பட நான்கு பழங்குடியின குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.

அமேசான் காட்டில் விபத்து : 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு | 4 Children Rescued After Plane Crash In Amazon

குழந்தைகள் மீட்பு 

மே 1 அன்று விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயர் தப்பியுள்ளனர். இவர்களை, அமேசான் காட்டிற்குள் தேட, 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை மோப்ப நாய்களுடன் சென்று மீட்டுள்ளனர்.