கர்நாடகாவில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது - வைரலாகும் புகைப்படம்
கர்நாடக மாநிலம், தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அல்மாஜ் பானுவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திடீரென்று அல்மாஜ் பானுவிற்கு ரத்தபோக்கு ஏற்பட்டதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
பிரசவத்தில் அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
பானுவிற்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

