மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

Andhra Pradesh Death
By Sumathi May 19, 2025 06:35 AM GMT
Report

காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.

சிக்கிய குழந்தைகள்

ஆந்திரா, துவாரபூடி கிராமத்தை சேர்ந்தவர் உதய்(8), சாருமதி (8), சரிஷ்மா (6), மனஸ்வி (6) ஆகிய நான்கு சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி - என்ன நடந்தது? | 4 Children Die Of Suffocation In Car Andhra

நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதுதான் மகளிர் மன்ற அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரிய வந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு

நால்வர் பலி

உடனே, கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நால்வரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி - என்ன நடந்தது? | 4 Children Die Of Suffocation In Car Andhra

தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.